மோதல்களைத் தடுப்பது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை – உள்நாட்டலுவல்கள் அமைச்சு!

Monday, March 12th, 2018

எந்தவொரு இடத்திலோ அல்லது எவ்வாறான சந்தர்ப்பத்திலோ சம்பவமொன்று ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பில் விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் , அனைத்து மாவட்டங்களுக்கும் பாதுகாப்பு குழுவொன்றை நியமிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மோதல் நிலையொன்று ஏற்படும் போது பாதுகாப்பினை பலப்படுத்துவதற்காக காவற்துறை மற்றும் இராணுவத்திற்கு ஆதரவளிப்பது மாவட்ட அரசாங்க அதிபர்கள் போன்று பிரதேச செயலாளர்களினதும் பொறுப்பு என விடயத்துக்கு  பொறுப்பான அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts: