மோட்டார்  வாகன  போக்குவரத்து  திணைக்களத்தின்  அறிவிப்பு!

Saturday, December 31st, 2016

ஏனையவர்களின் பெயர்களில் உள்ள வாகனங்களை தமது பெயருக்கு மாற்ற வேண்டும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்பட்டிருந்த கருணைக் காலம் நேற்று நள்ளிரவுடன்   முடிவடைவதாக  மோட்டார்  வாகன  போக்குவரத்து  திணைக்களம்  தெரிவித்துள்ளது.

வாகனங்களை தமது சொந்த பெயருக்கு மாற்ற வேண்டும் என்பதற்காக அபராத தொகை அறவிடாமல் கடந்த மூன்று மாத கருணைக்காலம் வழங்கப்பட்டிருந்தது. இக்காலத்திற்குள் வாகனங்களை தமது சொந்த பெயருக்கு மாற்றாமல் இருந்தால் எதிர்காலத்தில் அபராத தொகை அறவிடப்படும் எனவும் வாகனங்களை தமது பெயருக்கு மாற்றிக்கொள்ள இனி கால எல்லை வழங்கப்படாது எனவும்  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டத்தின் பிரகாரம் வாகனத்தை கொள்வனவு செய்யும் ஒருவர் 14 நாட்களுக்குள்  தமது  பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இந்நிலையிலும் தாம் வழங்கிய மூன்று மாத காலப்பகுதியில் வாகனங்களை தமது பெருக்கு மாற்றாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

50080

Related posts: