மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்!

Thursday, August 17th, 2017

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை, அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இதனைக் கூறினார்.

நாட்டில் அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்களை கவனத்திற் கொண்டு, அதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இதனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கூறினார்.
இந்த யோசனை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, Driver’s demerit points system இனை பிரயோக ரீதியாக செயற்படுத்துவதற்கான அதிகாரத்தை நீதிபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒப்படைப்பத்தல், ஆபத்தான இரசாயன பதார்த்தங்களை போக்குவரத்து செய்கின்ற வாகனங்கள், அவசர சேவை வாகனங்கள் மற்றும் பொது சேவை வாகனங்களை செலுத்துகின்ற சாரதிகளுக்கான விசேட தகைமைகளை வெளியிடல், வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடுகள், வாகன தண்டப்பணங்களை செலுத்துவதற்கு இலத்திரனியல் தொழில்நுட்ப முறையினை அறிமுகப்படுத்தல், அங்கவீனர்களால் பயன்படுத்தப்படுகின்ற விசேட வகை வாகனங்களை பதிவு செய்வதற்காக புதிய வாகன பிரிவை அறிமுகப்படுத்தல், மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் போன்றன இதில் உள்ளடங்குவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்.

Related posts: