மோட்டார் போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ள 7 புதிய மாற்றங்கள் – அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக 07 முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் – ஜனவரி 1ஆம் திகதிமுதல் வாகன எண் தகடுகளின் மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும்
அத்துடன் வாகன உரிமை மாற்றம் தொடர்பான MTA 6 படிவத்தை 12 பக்கங்களுக்கு மாற்றுதல்
வீதி போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுனர்களுக்கு டிமெரிட் புள்ளிகளை அறிமுகப்படுத்துதல்
நாடளாவிய ரீதியில் செவித்திறன் குறைபாடுள்ள சாரதிகளுக்கான உரிமங்களை அறிமுகப்படுத்துதல்
சஃபாரி வாகனங்களுக்கான பதிவு மற்றும் உரிமத் தகடுகளை வழங்குதல்
கேரேஜ்கள் மற்றும் கண்காணிப்புக்கான தரப்படுத்தல் பொறிமுறையை அறிமுகப்படுத்துதல்
வாகனப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக மின்-மோட்டார் அமைப்பு அறிமுகம் என்னிட்ட ஏழு மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|