மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை : அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

Wednesday, February 1st, 2017

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கான தரமான பாதுகாப்பு தலைக்கவசம் அணியும் சட்டம் ஏப்ரல் 01ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் தரமற்ற, பாதுகாப்பில்லாத விலைகுறைந்த தலைக்கவசங்களை அணிந்து பயணிக்கும் போது விபத்துக்குள்ளாகும் நிலையில் படுகாயம் அல்லது மரணம் சம்பவிக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

இதனை கருத்திற் கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் பாதுகாப்பானதும், தரக்கட்டுப்பாட்டைக் கொண்டதுமான தலைக்கவசங்கள் அணிவதை கட்டாயமாக்கும் சட்டமூலம் ஒன்று அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இச்சட்டமூலத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொதுப் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் இலங்கை தரக்கட்டுப்பாட்டுச் சபை என்பனவும் இந்த விடயத்தில் போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து செயற்பட சம்மதம் தெரிவித்துள்ளன

kmefi_161727

Related posts: