மோசடி நிறைந்த நிறுவனங்களை சீர் செய்வது அவசியமாகும் – ஜனாதிபதி

Wednesday, November 15th, 2017

நாட்டில் ஊழல் மோசடிகள் நிறைந்து காணப்படகின்ற நிறுவனங்களை இனங்கண்டு அவற்றை சீர் செய்வது அவசியமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரச சேவையில் உள்ள குறைபாடுகளை நீக்கி, அசர ஊழியர்களுக்கு வல்லமையையும் வழிகாட்டல்களையும் வழங்கி வினைத்திறனான அரச சேவையை கட்டியெழுப்புவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பவற்றின் நிதிக் கட்டுப்பாடு, செயற்றுகை என்பவற்றை மதிப்பீடு செய்து விருது வழங்கும் நிகழ்வு பாராளுன்ற குழு அறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரையாற்றிய .ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு சுதந்திரமான முறையில் பணியாற்றும் வாய்ப்புக் தற்போது கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தள்ளார்.

Related posts: