மோசடி தவிர்ப்பு குழு முறைக்கேடுகள் இழைத்தமை தொடர்பில் சாட்சிப் பதிவுகள் ஆரம்பிக்க திகதியிடப்பட்டது!

Thursday, February 24th, 2022

மோசடி தவிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகத்தால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, சாட்சிப் பதிவுகளை ஆரம்பிப்பதற்கு திகதியிட்டுள்ளது.

இதற்கமைய, அந்த ஆணைக்குழு எதிர்வரும் 28 ஆம் திகதிமுதல் சாட்சி பதிவுகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் வளாகத்தில் இந்த சாட்சிப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: