மோசடியாளர்களுக்கு முடிவுகட்டத் தயாராகுங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை!

Thursday, June 11th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல், மோசடியாளர்களுக்கு நாட்டு மக்கள் முடிவுகட்ட வேண்டும் அதற்காக மக்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும் என பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுத்தேர்தலைக் காலவரையறையின்றி ஒத்திவைக்க எதிரணியினர் முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சிக்கு உயர்நீதிமன்றம் பதிலடி கொடுத்தது. அதேவேளை, வேட்புமனுக்களையும் மீளத் தாக்கல் செய்ய எதிரணியினர் முயற்சித்தனர். அதுவும் தோல்வியில் முடிந்தது. ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை எதிரணிக்கு ஏற்பட்டுள்ளது.

மக்களின் ஜனநாயக உரிமையை சவாலுக்குட்படுத்திய எதிரணியினருக்குத் தேர்தலில் மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள். கடந்த ஆட்சியில் ஊழல், மோசடிகளால் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த ஐக்கிய தேசியக் கட்சியினரையும், ஐக்கிய மக்கள் சக்தியினரையும் மக்கள் வீட்டுக்கு அனுப்பியே தீருவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: