மொனோசோடியல் குளுட்டமேட்டை தடைசெய்யுமாறு கோரும் அத்துரலிய ரத்தன தேரர்!

செயற்கை உணவுச் சுவையூட்டியாக பயன்படுத்தப்படும் மொனோசோடியல் குளுட்டமேட் எனப்படும் இரசாயனத்தை அடுத்த ஆண்டு முதல் தடை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் அரசாங்கத்தை கோரியுள்ளார்.
இந்த இரசாயன பதார்த்தம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேரர் உரையாற்றினார்.
இயற்கையான உணவுச் சுவையூட்டிகள் காணப்படும் இலங்கைக்கு செயற்கை உணவுச் சுவையூட்டிகளின் அவசியம் கிடையாத. வருடாந்தம் இலங்கைக்கு 22 ஆயிரம் மெற்றிக்தொன் மொனோசோடியல் குளுட்டமேட் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கென 35 கோடி ரூபா செலவிடப்படுவதாக அவர் கூறினார்.
Related posts:
கூகுள் வரைப்படத்தில் இலங்கையின் (Google Maps) வீதிகள் (Street view)
பிரதியமைச்சர் தெவரப்பெரும தற்கொலை முயற்சி!
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பு!
|
|