மொத்த விற்பனையாளர்களுக்கு கொழும்புக்கு செல்ல அனுமதி – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன!

கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கு நாளை 16 ஆம் திகதிமுதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்துக்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, அவர் மேலும் கூறுகையில் –
பிரதேச செயலகங்களில் இதற்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு, மொத்த விற்பனை நோக்கில் பொருட்களை கொள்வனவு செய்யவதற்காக மாத்திரம் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்துக்கு வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்துங்கள்: அடுத்த ஐந்து வருடங்களில் நிரந்தர தீர்வு- ஈ.பி.ட...
இலங்கைக்கு மற்றுமொரு பாரிய உதவியை வழங்குகிறது இந்தியா - வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ...
சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக உடலில் ‘சிப்’ பொருத்தி நடமாட்டத்தை ...
|
|