மொத்த விற்பனைச் சந்தையை மீனவ சங்கம் நடத்த அனுமதிக்க வேண்டும் – சுழிபுரம் கடற்தொழிலாளர் சங்கம்!
Thursday, May 16th, 2019கரையோரச் சங்கங்களில் இடம்பெறும், மீன்களின் மொத்த விற்பனைச் சந்தையை அந்தப்பகுதியில் உள்ள மீனவர் சங்கங்களே நடத்த அனுமதி தர வேண்டும் என்று சுழிபுரம் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
சங்கானைப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. கடற்தொழிலாளர் பிரச்சினை பற்றிய ஆய்வின் போது சங்கத்தின் பிரதிநிதிகள் சார்பில் கலந்து கொண்ட சங்கத்தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். “கரையோரங்களில் இடம்பெறும், மீன்களின் மொத்த விற்பனைச் சந்தையை அந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் சங்கங்களே நடத்த வேண்டும் என்று கடந்த 2006 ஆம் ஆண்டு மாவட்டச் செயலரிடம் எழுத்து மூலம் கேட்டு, அவர் எழுத்து மூலமே பதில் வழங்கியிருந்தார்.
கரையோரத்தில் இருக்கின்ற மொத்த விற்பனை நிலையத்தை கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கம் தங்கள் நலனுக்காக நடத்தலாம் என்று தெரிவித்தார். இதை பிரதேச சபை கவனத்தில் எடுக்க வேண்டும். ஏனென்றால் பிரதேச சபை அந்த விற்பனை நிலையத்தை தங்களுக்குள் உள்வாங்கினால் மீனவர்கள் ஒன்றும் செயற்பட முடியாது போய்விடும். இந்த வருமானம் மூலம் தான் சங்க மீனவர்களை சிறந்த முறையில் வழி நடத்த உதவியாக உள்ளது என்பதை ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்” என்று அந்தச்சங்கத்தின் தலைவர் கேட்டுக்கொண்டார்.
Related posts:
|
|