மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதமாக வளர்ச்சி – தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, June 15th, 2024

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.3 சதவீதமதாக வளர்ச்சியடைந்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 31,61,963 மில்லியன் ரூபாவாக பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 33,29,583 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், விவசாயத்துறை 1.1 சதவீதமாகவும், தொழில்துறை 11.8 சதவீதமாகவும், சேவைத்துறை நடவடிக்கைகள் 2.6 சதவீதமாகவும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: