மொடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கும் பயன்படுத்தலாம் – ஐரோப்பிய ஔடத முகவரகம் பரிந்துரை!

Saturday, July 24th, 2021

அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசியை 12 வயதுமுதல் 17 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு செலுத்த முடியுமென ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் அமெரிக்காவில் 3 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு உண்டாகும் எதிர்புடல்களுடன் ஒப்பிடும்போது அதேயளவு எதிர்ப்புடல்கள் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களிடமும் உண்டாகுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது கொவிட் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பைசர் தடுப்பூசி மாத்திரமே 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு செலுத்த முடியுமென ஐரோப்பிய ஔடத முகவரகம் பரிந்துரைத்துள்ளது.

எனவே அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசி சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்திற்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனடிப்படையில் மொடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையான சிறுவர்களுக்கு செலுத்தலாம் என அமெரிக்க மருந்துகள் நிறுவனம் பரிந்துரை வழங்கியுள்ள அதேவேளை இந்த தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஔடத முகவரகம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தி கற்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள  நாடுகளுக்கு இதுவொரு சிறந்த தீர்வாகுமென ஐரோப்பிய ஔடத முகவரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: