மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு – பேராதனை பல்கலைக்கழகம்!
Wednesday, January 8th, 2020கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட நகரங்களில் வளிமண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மைக்ரோ பிளாஸ்டிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பதால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என பட்டப்படிப்பிற்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர், பேராசிரியர் H.M.T.G.A. பிட்டவல தெரிவித்துள்ளார்.
மிக நுண்ணிய அளவில் இந்தத் துகள்கள் காணப்படுவதால், சில சந்தர்ப்பங்களில் அவை சுவாசத்தினூடாக உட்செல்லக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வளிமண்டலத்தில் 40 தொடக்கம் 60 வரை தூசு துகள்களின் செறிவு தரச்சுட்டி காணப்படுவதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கில் அனைத்து சந்தைகளின் வியாபார நடவடிக்கைகளும் மீள ஆரம்பம் - வவுனியாவில் திருமண வைபவங்களுக்கு தட...
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கு விசேட பயிற்சி வழங்கும்...
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்து விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 90 மில்லியன் நட்டம் - ...
|
|