மே 9 வன்முறை: பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடமிருந்து நட்டஈடு பெற நடவடிக்கை – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

நாட்டின் பல பிரதேசங்களில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீது, வழக்குத் தொடரப்பட்டு அவர்களிடமிருந்து நட்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், பேருந்துகளை சேதப்படுத்திய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மார்ச் மாதம் 31 ஆம் திகதி மிரிஹானயில் இடம்பெற்ற போராட்டத்தின்போது, இராணுவத்தின் பேருந்துக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தெரணியகலை பகுதியைச் சேர்ந்தவரென பொலிசார் தெரவித்துள்ளனர். அவர் வாகன உதிரிபாக விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது,
000
Related posts:
|
|