மே- 2 ஆம் திகதியை  வர்த்தக விடுமுறையாகப்  பிரகடனம் செய்யுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு யாழ் .வணிகர் கழகம் கடிதம்

Sunday, May 1st, 2016

மே- 2 ஆம் திகதியை  வர்த்தக விடுமுறையாகப்  பிரகடனம் செய்யுமாறு கோரி யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்  என். வேதநாயகனுக்கு யாழ் .வணிகர் கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக யாழ். வணிகர் கழகம் 30-04-2016  திகதியிட்டு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்  என். வேதநாயகனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேதினம் தொழிலாளர்களுக்கான தினமாக அகிலமெங்கும் அனுட்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் தொழிலாளர்களுக்கு மேலதிக விடுமுறையாக வழங்கப்படுவது வழமையானது. எனினும் இம் முறை ஞாயிற்றுக்கிழமை மேதினம் வருவதனால் தனியார் துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய மேலதிக விடுமுறை இல்லாமல் போகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடினமான பணிகளில் ஈடுபட்டுள்ள பல தொழிலாளர்கள் குறிப்பாக வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளிகள் திங்கட்கிழமையை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என யாழ் வணிகர் கழகத்தை கோரியுள்ளார்கள். இவ்வாறான அவர்களது கோரிக்கை நியாயமானதும், ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுமானதாகும்.

எனவே, அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு மே -2 ஆம் திகதி  திங்கட்கிழமையை வர்த்தக விடுமுறையாக அறிவிக்கத்  தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத்  தயவாகத்  தங்களைக்  கேட்டுக்கொள்கின்றோம் என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: