மே 11 இல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு!

பாடசாலைக் கற்றலின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 20ம் திகதி இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவிருந்தன.
எனினும், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இரண்டாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை மே 11ம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலையடுத்து மார்ச் மாதம் 12ம் திகதி அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வயதெல்லை நிர்ணயம்!
9 மி.மீ துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யத் தீர்மானம்!
தென்கிழக்கு அவுஸ்ரேலியாவில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !
|
|