மே 11 ஆம் திகதியுடன் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்குமென்று நான் ஒருபோதும் கூறவில்லை – சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க விளக்கம்!
Sunday, May 3rd, 2020இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதியுடன் கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வரும் என தான் ஒருபோதும் கூறவில்லை என சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
“மே மாதம் 11ஆம் திகதி கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் என்ற கருத்தை வெளியிடவில்லை. ஊடங்கள் எப்படி அவ்வாறு பதிவிட்டதென்பது எனக்கு தெரியவில்லை. எனினும் கடற்படையினராலேயே உண்மையாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
கடற்படையினர் இருந்த பிரதேசங்களில் ஏதாவது ஒரு வகையில் கொத்துக்கள் ஏற்படவில்லை என்றால் நிச்சியமாக நோயாளின் எண்ணிக்கையில் குறைவொன்றை காணமுடியும். கடற்படையினர் சென்ற பிரதேசங்களிற்கமையவே இதன் நிலையை அறிய முடியும் என்பதையே நான் கூறினேன். அத்துடன் சமூகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகும் என கூற முடியாது.
சிறிய எண்ணிக்கையிலானோர் அடையாளம் காணப்படலாம். உதாரணமாக நேற்று முன்தினம் தாபர் மாவத்தையில் இரண்டு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் சமூகத்தில் உள்ளவர். அது போன்ற குறைந்த எண்ணிக்கையிலானோரை அடையாளம் காணலாம். எனினும் எங்கே, எப்படி, யாரிடம் இருந்து பரவியது என்ற விடயத்தை எங்களால் அடையாளம் காண முடியும்.
எப்படியிருப்பினும் கொரோனா தடுப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைக்கமைய பார்க்கும் போது நிலைமை சிறப்பானதாகவே பார்க்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|