மே மாதம்முதல் சதோச நிறுவனங்கள் கிராமப்புறங்களில் நிறுவப்படும் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Saturday, April 3rd, 2021

பழுப்பு நிற சீனி சத்தோசவின் ஊடாக கிலோ ஒன்று 115 ரூபாவுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறைஅமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் வர்த்தகத்துறை தெரிவித்துள்ளார்.

லங்கா சீனி நிறுவனம் தற்போது இலாபத்தில் இயங்கி வருகிறது. எனவே அந்த லாபத்தின் பயனை பொதுமக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலேயே புதுவருடக்காலத்தில் சீனியின் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா சீனி நிறுவனம் வியாழக்கிழமையன்று 142 மில்லியன் ரூபாவை விற்பனை வருமானமாக பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மே மாதம்முதல் சத்தோச நிறுவனம் கிராமப்புறங்களில் நிறுவப்படும் என்றும் பந்துல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: