மேல் மாகாணத்தில் நிலவும் குப்பை பயன்படுத்தி மின்சார உற்பத்தி பெற நடவடிக்கை!

Wednesday, March 4th, 2020

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குப்பைகளை பயன்படுத்தி எதிர்வரும் மே மாதம் முதல் 10 மெகா வொட் மின்சாரத்தை உற்பத்தி திட்டமிடப்பட்டுள்ளது.

கெரவலபிட்டிய திண்ம கழிவு உற்பத்தி திட்டத்தில் இருந்து மின்சாரத்தை பெற இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இந்த மின் நிலையத்தை நிர்மாண பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் குறித்த மின் உற்பத்தி நடவடிக்கையை அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொழும்பு நகரில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்க முடியும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (02) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கொழும்பு நகர எல்லையில் மாத்திரம் நாள் ஒன்றுக்கு 550 முதல் 600 டொன் வரையான குப்பை சேகரிக்கப்படுவதுடன் அதன்மூலம் இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு மின்சாரம் தயாரிக்க 1000 டொன் குப்பை தேவைப்படுகிறது.

கொழும்பு நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் சகல திண்ம கழிவுகளையும் பெறுவதற்கு மாகாண அதிகார சபையுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் கொழும்பு நகர சபைக்குட்பட்ட எல்லையில் குப்பைகளை போதிய அளவில் அகற்றாததால் கம்பாஹா மற்றும் மொரட்டுவ ஆகிய நகராட்சி பகுதிகளில் இருந்து மேலும் 400 டொன் குப்பைகளை சேகரிக்க திண்மகழிவு மேலாண்மை ஆணையகம் மற்றும் பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக 10 மெகா வொட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்வரும் மே மாதம் முதல் உத்தேசிக்கப்பட்டுள்ளது

Related posts: