மேல் மாகாணத்திலிருந்து வெளியேற தடை – இராணுவத்தளபதி அறிவிப்பு!

Wednesday, November 11th, 2020

!

உடன் அமுலுக்கு வரும் வகையில் மேற்கு மாகாணத்திலிருந்து மக்கள் எவரும் வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், மாகாணத்திற்குள் நுழையும் தனிநபர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்றையதினம் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் மேற்கு மாகாணத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

மேற்கு மாகாணத்தில் ஏராளமான கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதால், இது ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையிலேயே இராணுவத்தளபதி மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.

Related posts: