மேல் மாகாணசபை இணையத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு!

Friday, November 23rd, 2018

மேல் மாகாண சபை சபா மண்டபத்தில் உறுப்பினர்களின் தேவைக்காக அமைக்கப்பட்ட கணினிகளில் ஆபாச இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை பார்வையிட முடியாதவாறு தடைசெய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபையில் கடந்த திங்கட்கிழமை சில உறுப்பினர்கள் சபையில் இருந்த கணினியில் ஆபாசக் காட்சிகளை பார்வையிட்டனர். இதையடுத்து ஆபாச இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை சபா மண்டபக் கணினிகளில் பார்வையிட முடியாதவாறு தடைசெய்துள்ளதாக மாகாணத்தின் தலைமைச் செயலர் தெரிவித்தார்.

Related posts: