மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று முதல் Rapid Antigen பரிசோதனை – இதுவரை 117 மரணங்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சகாதார அறிக்கையில் தெரிவிப்பு!
Friday, December 18th, 2020மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று வெள்ளிக்கிழமைமுதல் எழுமாறான அடிப்படையில் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
பேருந்துகள் உட்பட வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு இவ்வாறு எழுமாறான அடிப்படையில் பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இலங்கையில் இதுவரை 160 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் அதில் 117 மரணங்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அத்துடன் இடம்பெற்ற கொரோனா மரணங்களில் 04 பேர் 30 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 31 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 4 பேரும், 41 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 20 பேரும் 51 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட 28 பேரும் உயிரிழந்துள்ளனர். வயது 61 முதல் 70 க்கு இடைப்பட்ட 32 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 70 வயதுக்கும் அதிகமான 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 15 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 11 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 05 பேரும் குருணாகலை மாவட்டத்தில் 04 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 02 பேரும் மாத்தளை, கண்டி , நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.
மேலும் வசிப்பிடம் அடையாளம் காணப்படாத மரணம் ஒன்றும் சிறைச்சாலை மரணங்கள் இரண்டும் பதிவாகியுள்ளன.
இதேவேளை நாட்டில் இடம்பெற்ற 160 கொரோனா மரணங்களில் 98 மரணங்கள் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளன. வீட்டில் மற்றும் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் போது உயிரிழந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 62 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|