மேலும் 8 நாடுகளுக்கு விமானப் பயண தடை!

Saturday, March 14th, 2020

எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவுமுதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன், ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கு இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களை தடை செய்ய சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விமானப் பயணத்தை தடையானது எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவுமுதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளில் இருந்து இலங்கைக்கு விமானங்கள் வருவதை இடைநிறுத்த அதிகாரிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.

இதுவரை 11 நாடுகளுக்கு விமானப் பயணங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் உபுல் தர்மதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: