மேலும் 50,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்றிரவு இலங்கைக்கு – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

Thursday, May 27th, 2021

ரஷ்யாவிடமிருந்து  50,000  ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு  கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துனட் இந்த தடுப்பூசிகள் இன்று (27) இரவு நாட்டை வந்தடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையினால் மொத்தமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளின் இரண்டாவது தொகுதியே இவ்வாறு கிடைக்கப்பெறவுள்ளன.

இதற்கு முன்னதாக கடந்த 3 ஆம் திகதி  முதல் தொகுதியாக 15,ஆயிரம் ஸ்புட்னிக் V  தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: