மேலும் 400 பேருக்கு கொரோனா – இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Saturday, November 7th, 2020

நாட்டில் மேலும் 400 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாயிரத்தைக் கடந்து ஒன்பதாயிரத்து 492ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 970ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 563 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை ஏழாயிரத்து 373 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 29 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாலும் அவர்களுக்கு அது மீண்டும் ஏற்படும் சாத்தியம் - உலக சுகாதார ஸ்தா...
தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானிக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றில் மூன்றாவது நாளாக ...
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் - அமைச்சர் சரத் வீரசேகர உறுதி!