மேலும் 4 புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை – நெடுஞ்சாலைகள் அமைச்னரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, January 19th, 2022

இலங்கை அரசாங்கம் மேலும் 4 புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

அதனடிப்படையில் முத்தெட்டுகல புகையிரத குறுக்கு வீதி ஹிரிபிட்டிய சந்தி, பஸ்யால சந்தி, நீர்கொழும்பு மரிஸ்டெல்லா சந்தி மற்றும் தலவத்துகொட சந்தி ஆகிய இடங்களில் 4 புதிய மேம்பாலங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் குறித்த இடங்களில் நான்கு மேம்பாலங்கள் அமைப்பதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வுகளை வழங்குவதற்காக அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) அடையாளம் கண்டுள்ளது.

நாட்டில் இந்த உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எக்ஸிம் வங்கியின் (Exim Bank) ஊடாக சலுகை நிதி வசதிகளை வழங்குவதற்கு ஹங்கேரியா நிதி நிறுவனம் ஒன்று உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: