மேலும் 39 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா – கொவிட் -19 தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிப்பு!

Tuesday, November 3rd, 2020

பொலிஸ் அதிகாரிகள் மேலும்  39 பேர்  கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராஜகிரியவில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 23 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது

அத்தோடு பொரள்ளை பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட 8 பொலிஸ் அதிகாரிகள் , இராஜகிரிய பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்ட 02 பொலிஸ் அதி காரிகள் , வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் 02 பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கோட்டை மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையங்களிலும், கொழும்பு நகர போக்குவரத்து பிரி விலும் , குற்றப் புலனாய்வுத் துறையில் தலா ஒரு அதி காரிக்கும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: