மேலும் 3 பொலிஸ் பிரிவுகள் இன்று முடக்கப்பட்டன – இராணுவத் தளபதி அறிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய 3 பொலிஸ் அதிகார பிரிவுகள், நேற்றிரவு 11 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சிலவா அறிவித்துள்ளார்.
அதேநேரம், இன்று காலை மேலும் இரண்டு மாவட்டங்களின் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
இதன்படி கம்பஹா மாவட்டத்தின் கப்புகொட செபஸ்டியன் வீதியில் இருந்து தெபடிய வீதி வரையான பகுதியும், பிட்டிபன – லெல்லம பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தின் ரொட்டே கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டக்ளஸ் தேவானந்தாவை அரசியல் தலைவராக கொண்ட மக்கள் பெரும் பேறு பெற்றவர்கள் - தேசிய எழுச்சி மாநாட்டு ஆசி...
HIV தொற்றாளர்களுக்கான ஔடதத்தை வழங்க விசேட நடவடிக்கை - பணிப்பாளர் ரசாஞ்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!
பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலை தொடர்பில் கலந்துரையாடல்!
|
|