மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!
Thursday, July 22nd, 2021இலங்கைக்குமேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.
தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு இன்றையதினம் நாட்டை வந்தடைந்துள்ளன.
இன்றையதினம் நாட்டை வந்தடைந்த 20 இலட்சம் தடுப்பூசிகளுடன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மொத்த சைனோபாம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 91 இலட்சமாக அதிரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றையதினம் நாட்டை வந்தடைந்த 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளில், குருணாகல் மாவட்டத்துக்கு 4 இலட்சம் தடுப்பூசிகளும், காலி மாவட்டத்துக்கு 2 இலட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகளும், மாத்தறை, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 இலட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன.
அவ்வாறே, குறித்த சைனோபாம் தடுப்பூசிகளில் புத்தளம், பொலனறுவை, நுவரெலியா, மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு இலட்சம் தடுப்பூசிகளும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு ஒரு இலட்சத்து 25, ஆயிரம் தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|