மேலும் 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் சீனாவிலிருந்து இலங்கை வந்தடைந்தன!

Tuesday, July 27th, 2021

சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மேலும் 16 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

சீனாவின் பீஜிங் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 565 என்று தடுப்பூசிகளை எடுத்து வந்த விசேட விமானம், இன்று காலை 8 மணியளவில் இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பூசிகளை எடுத்துவந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான மற்றுமொரு விமானம் இன்று காலை 10.10 மணியளவில் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனா அரசாங்கத்தினால் ஒரே தடவையில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அதிகளவான சினோபார்ம் தடுப்பூசி தொகை இதுவாகும்.

அதனடிப்படையில் இதுவரையில் சீன அரசாங்கத்தினால் 27 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: