மேலும் 100 பேருக்கு கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி!

Thursday, December 15th, 2016

கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் 100 மீனவ யாத்திரிகர்கள் பங்கேற்க இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அவர்கள் பங்கேற்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயத்தை புதிதாக நிர்மாணிக்க இலங்கை அரசு முடிவெடுத்தது.

அதன்படி, புதிய ஆலயத்தை நிர்மாணித்து அதனை அர்ச்சிப்பு செய்யும் விழாவை கடந்த 7-ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருந்தது.

இது குறித்து, மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றதோடு, தமிழக மீனவர்கள் ஆலய அர்ச்சிப்பு செய்யும் விழாவில் கலந்து கொள்வதற்கு மத்திய அரசு வழக்கமாக வழங்கும் தடையில்லாத சான்று வழங்க வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

வேண்டுகோளுக்கு இணங்க, முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால், புதிய ஆலயத்தின் அர்ச்சிப்பு செய்யும் விழா நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆலய அர்ச்சிப்பு செய்யும் விழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு தடையில்லாத சான்றினை மத்திய அரசு வழங்க வேண்டுமென முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு உரிய பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டார். இதன் பயனாக, புதிய ஆலய அர்ச்சிப்பு செய்யும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 100 மீனவ யாத்திரிகர்கள் கலந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கச்சத்தீவு ஆலய அர்ச்சிப்பு செய்யும் விழாவில் மீனவ யாத்ரீகர்கள் கலந்து கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

808910799kachativ-L

Related posts: