மேலும் பலருக்கும் நிவாரண தொகை வழங்க அரசாங்கம் தீர்மானம்!

Sunday, April 5th, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொருளாதார பாதிப்பை எதிர்நோக்கி வருவரும் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூபா 5000 கொடுப்பனவை சுற்றுலாத்துறையில் ஈடுபடும் நபர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள சுற்றுலாத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அவர்களது பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம சேவக அலுவலர்களை தொடர்பு கொண்டு குறித்த வேண்டுகோளை முன்வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அதில் பணிபுரியம் ஊழியர்களும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த உதவித்தொகையானது முச்சக்கரவண்டி சாரதிகள், தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு எதிர்காலத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: