மேலும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு விரைவில் தடை – சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு!

Sunday, April 11th, 2021

பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வர்த்தமானிக்காக மேலும் இரண்டு பட்டியல்கள் தொகுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, ஊதப்பட்ட பொம்மைகள், சிச்செட் பக்கட்டுகள் (sachet packets) மற்றும் பிளாஸ்டிக் தண்டுகளுடன் கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதிமுதல், இலங்கையில 20 மில்லி அல்லது 20 கிராம் மற்றும் அதற்கும் குறைவான உணவு மற்றும் மருந்துகளை பொதி செய்வதைத் தவிர டீனைய சச்செட்டுகளைப் (sachet) பயன்படுத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஊதப்பட்ட பொம்மைகள் பலூன்கள், பந்துகள், நீர் மிதக்கும் /பூல் பொம்மைகள் மற்றும் நீர் விளையாட்டு கியர் மற்றும் பிளாஸ்டிக் தண்டுகளுடன் கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு தடைசெய்யப்பட்டுள்ளன என அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கு அதிபர் ஆசிரியர்களின் நிலுவைகள் ஜனவரியில் சீராகும் - வடக்கு கல்விச்செயலர் தெரிவிப்பு!
வைத்திய நிபுணரை விடுவித்தால் யாழ்.போதனா வைத்தியசாலையின் மூளை நரம்பு இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்த...
யாழ் மாநகரின் முதல்வர் தெரிவு இழுபறி நிலைக்கு தமிழரசுக் கட்சிக்குள் இருந்துவரும் கோஸ்டி பூசல்களே கார...