மேலும் நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் இன்றுமுதல் இரத்து!
Monday, March 16th, 2020ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமான சேவைகள் நாளைய தினம் முதல் இரண்டு வாரங்களுக்கு இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. உலகில் பல நாடுகள் கொரேனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஸ்தம்பித்துள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கையிலும் இதுவரையில் 18 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டுக்கு பொருத்தமான அதிகாரப்பகிர்வே நடைமுறைப்படுத்தப்படும் - பிரதமர்
150ஆவது வருட சேவையை பூர்த்தி செய்யும் இலங்கை பொலிஸ் !
சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் ...
|
|