மேலும் சில மானியங்களை மார்ச் 31 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு தீர்மானம் – போக்குவரத்து அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, March 10th, 2021

பேருந்து சேவைகளை மீள்நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில காலம் எடுக்கும் என்பதால், வழங்கப்பட்டுள்ள மானியங்களுடன் மேலும் சில மானியங்களையும் 2021 மார்ச் மாதம் 31 ஆம் வரை நீடிப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொரோனா தொற்றின் பாதிக்ககள் தொடர்பில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவை தொடர்பாக  அமைச்சரவைக் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.

முன்பதாக கொரோனா தொற்று நிலைமையில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பேருந்து உரிமையாளர்களிடமிருந்து அறிவிடப்படும் புதுப்பித்தல் கட்டணம், தாமதக் கட்டணம், விலைமனுக் கோரல் கட்டணம், நேரசூசி கட்டணம், உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திர கட்டணம் போன்றவற்றை 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை விடுவிப்பதற்காக 2020 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேருந்து சேவைகளை மீள்நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில காலம் எடுக்கும் என்பதால், குறித்த மானியங்களுடன் கீழ்க்காணும் மானியங்களையும் 2021 மார்ச் மாதம் 31 ஆம் வரை நீடிப்பதற்காகவும் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் வருடாந்த விலைமனுக் கோரல் கட்டணத்தின் 10 வீதம் அல்லது 15,000/= ரூபாய்கள் போன்ற பெறுமதிகளில் அதிக பெறுமதி கொண்ட தொகையை அறவிடல், அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திரக் கட்டணத்தின் 10 வீதத்தை அறவிடல் நேரசூசி மற்றும் உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணத்தை விடுவித்தல் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: