மேலும் கால அவகாசம் வழங்க ஐ.நா முடிவு!

Tuesday, June 28th, 2016

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் இதனூடாக இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதற்கே இந்த கால அவகாசம் வழங்கப்பட வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அமைவாக அரசாங்கமானது உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..

எனவே அந்த வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் வெளிவிவவாகர அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதுமட்டுமன்றி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் ஆறு மாதக்கால சிறைத்தண்டனை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
நீரிழிவு உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாகாதார தரப்பினர் விடுத்துள்ள அவசர எச்சரிக...
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான திரிபோஷாவை இந்த வாரத்திற்குள் வழங்குவதற...