மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Saturday, April 1st, 2017

இன்ப்ளுவென்சா ஏ.எச்.வன்.என்.வன் காய்ச்சலுக்கு இணையாக நாடு பூராகவும் மேலும் ஒரு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சின் பணிப்பாளர் நாயகம், சிறப்பு மருத்துவர் ஜயசுந்தர பண்டார இதனை தெரிவித்துள்ளார். காய்ச்சல், இருமல், தடிமன் ஆகிய அறிகுறிகள் தென்படும் நோயாளர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார். இந்த புதிய காய்ச்சல் தொடர்பில் சிறார்கள், கர்ப்பிணி தாய்மார், வயோதிபர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது

Related posts: