மேலும் ஒரு தொகை நனோ நைதரசன் திரவ உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை!

இன்றுமுதல் மேலும் 58 ஆயிரம் லீட்டர் நனோ நைதரசன் திரவ உரத்தை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்தாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை, குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்காக திரவ உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக விவசாய சேவைகள் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹெக்டேயருக்கு 1.5 லீட்டர் திரவ உரம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேநேரம் விவசாயி ஒருவருக்கு 02 ஹெக்டேயருக்கான திரவ உரத்தை இலவசமாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த 03 மாவட்டங்களுக்கான நனோ திரவ உர விநியோக நடவடிக்கைகள், நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு நாடாளுமன்ற விசேட குழு – சபாநாயகரிடம் பெண...
வைத்தியரின் கடமைகளுக்கு இடையூறு - மொரட்டுவ நகரசபை மேயர் விளக்கமறியலில்!
செயன்முறை பரீட்சை பெறுபேறு இன்றி 2 இலட்சத்து 36 ஆயிரத்து 53 பேர் உயர் தரத்துக்கு தகுதி - பரீட்சைகள்...
|
|