மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

Friday, July 2nd, 2021

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒருதொகை சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.

இதற்கமைய ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டினை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசி டோஸ்கள் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சீனாவின் பீஜிங்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளது.

குறித்த தடுப்பூசி தொகை மத்திய தடுப்பூசி களஞ்சியத்திற்கு லொறி ஒன்றின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் சரக்கு எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: