மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தது – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Tuesday, November 23rd, 2021

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்றையதினம் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இந்த வாரத்திற்குள் 1,9 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அடுத்த மாதம்முதல் வாராந்தம் தலா 30 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: