மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும் – சுகாதார அமைச்சு தகவல்!
Saturday, July 31st, 2021உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 7 இலட்சத்து 28 ஆயிரத்து 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளே இன்று கிடைக்கப்பெறவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்ட சுமார் 5 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கான இரண்டாம் செலுத்துகைக்காக குறித்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் 5 இலட்சத்து 26 ஆயிரம் பேர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ளனர். இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் பின்னர், எஞ்சிய தடுப்பூசிகளை கேகாலை மாவட்ட மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு -அமைச்சர் ரவி கருணாநாயக்க!
இலங்கை இந்திய பிரதமர்கள் எதிர்வரும் புதன்கிழமை சந்திப்பு!
பொது பாதுகாப்பு அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
|
|