மேலும் ஐந்து எரிபொருள் கப்பல்கள் இலங்கை வருகிறது – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவிப்பு!

Monday, February 21st, 2022

இந்த வாரத்தில் மேலும் 5 கப்பல் எரிபொருட்கள் நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாகவும் அந்த வகையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்றும் தொடர்ந்து வரும் நாட்களிலும் 5 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளன. டீசல், பெற்றோல் மற்றும் விமானங்களுக்கான எரிபொருளை தாங்கிய கப்பல்களே அவையாகும்.

அதற்கிணங்க எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் என்ற பேச்சுக்கு இடமில்லை. நாட்டின் எரிபொருள் தேவை 6000 மெட்ரிக் தொன்னாக உள்ளதுடன் தற்போது எரிபொருளுக்கான கேள்வி வெகுவாக அதிகரித்துள்ளது. அதற்கிணங்க தற்போது 9000 மெட்ரிக் தொன் எரிபொருள் தேவைப்படுகின்றது என்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ப்ரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.34 அமெரிக்க டொலர்களால் உயர்வடைந்துள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் டப்ளியுவ்.டி. ஐ ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

யாழ்ப்பாணப் பல்கலையின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்திய கலாநிதி சுரேந்திரகுமாரன் தெரிவு ! யாழ...
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன் - சிறித...
சில தென்னிலங்கை இனவாத தலைவர்களுக்கு விலைபோனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக்...