மேலும் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள்!

Thursday, June 4th, 2020

இலங்கைக்குள் கொரோன தொற்றாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் இன்று சுகாதார தரப்பினரால் வெளியான தகவலின்படி மேலும் 14 கொரோனா தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை  ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 902 பேர் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு இதுவரை 836 பேர் குறித்த தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 14 பேரும் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் இதுவரை, இலங்கையில் கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: