மேலதிக பணம் அறவிடும் பேருந்துகளின் அனுமதி பத்திரம் இரத்து – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

பண்டிகைக் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்திற்கு மேலதிகமாக பணம் அறவிடும் பேருந்துகளின் பயண அனுமதி பத்திரம் தடைசெய்யப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த பேருந்துகளின் பயண அனுமதி மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நீண்ட தூர பயணங்களுக்கு மட்டும் மாகாண பயணிகள் அதிகார சபையினால் விசேட கட்டணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.
குறித்த பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் அதிகமாக பணம் அறவிடப்படுதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் 1955 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று தேசியபோக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Related posts:
வெட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்த நபர் மீட்பு!
மலேஷிய பிரதமர் இலங்கை வந்தடைந்தார்!
உரிய பராமரிப்பின்றி அரச நிறுவனங்களிடம் 9704 வாகனங்கள் கிடப்பில் – ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அ...
|
|