மேற்பார்வையாளர் மரணம்!

Thursday, August 4th, 2016

தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் மேற்பார்வையாளர் ஒருவர் திடீர்மரணமடைந்த சம்பவம் ஒன்று பண்டாரவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் 54 வயதான ஒருவரே மாரடைப்புகாரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரவெல புனித ஜோசப் வித்தியாலயத்தில் கடமையிலிருந்த ஒருவரே இவ்வாறுமரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாணவர்களின் பரீட்சைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லை என்றும் பரீட்சைகளின் மேலதிக நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: