மேற்கூரை சூரிய மின்சக்திக்கான கட்டணங்கள் அடுத்த வாரம் திருத்தப்படும் – மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

மேற்கூரை சூரியசக்திக்கான கட்டண விகிதத்தை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையே நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அடுத்த வாரத்திற்குள் புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.
குழுவினர் அதன் பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அடுத்த வாரத்திற்குள் புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் பொருளாதார காரணிகள், குறைந்த செலவில் உருவாக்கம், நிதி திறன் போன்றவற்றை அவர்கள் கருத்திற்க் கொள்வார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்கு வரும் புகையிரதங்களின் பாதுகாப்பிற்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள்!
இலங்கையில் அமுலுக்கு வரும் தடை : மீறினால் கடுமையான நடவடிக்கை!
விளையாட்டுத்துறை சட்டத்தை மறுசீரமைக்க ஆறுமாத காலப்பகுதிகள் புதிய சட்டம் – அமைச்சர் நாமல் ஆராய்வு!
|
|