மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு – செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் இரத்து!

Tuesday, October 24th, 2023

அரச தாதியர் சேவையில்  தரம் நான்கு செவிலியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், ஏற்கனவே ஓய்வு பெற்ற அந்தந்த பதவிகளில் உள்ள அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: