மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம்!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்காக நிலவிய குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்து இருந்ததுடன் அதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான அரசியலமைப்பு சபை கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தது.
அதனடிப்படையில் அவர் இன்று (28) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
Related posts:
இராணுவத்திலிருந்து விலகுவதற்கான கால அவகாசம் அறிவிப்பு!
நாடாளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை!
பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!
|
|