மேதினம்: போக்குவரத்து சபையிடம் 5,000 பஸ்கள் கோரிக்கை!
Wednesday, April 26th, 2017மேதினக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்துச்செல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் இலங்கை போக்குவரத்து சபையிடம் பஸ்களை கோரியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
பஸ்களுக்கான கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் அனைத்து கட்சிகளுக்கும் பஸ்கள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, மேதினக் கூட்டங்களுக்காக சுமார் 5,000 பஸ்களை அரசியல் காட்சிகள் கோரியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 4,000 பஸ்களையே இந்த தேவைகளுக்காக ஒதுக்கமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனியாரிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி!
ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்ட ரஞ்சன்!
இலங்கைக்கான நிதியளிப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புக்கு சீனா இன்று ஆதரவை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்...
|
|